Signed in as:
filler@godaddy.com
Signed in as:
filler@godaddy.com
Please reach us at vishnu@wellheals.in if you cannot find an answer to your question.
Physiotherapy is a type of healthcare that helps people improve their movement and reduce pain using exercises, stretches, and various treatments.
பிசியோதெரபி என்பது ஒரு வகையான மருத்துவ சிகிச்சை முறை, இது மக்கள் தங்கள் உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், உடற்பயிற்சிகள், உடல் நீட்சிகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளைப் பயன்படுத்தி வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
Physiotherapy can help you recover from injuries, reduce pain, and improve your ability to move and do daily activities.
பிசியோதெரபி காயங்களில் இருந்து மீளவும், வலியைக் குறைக்கவும், தினசரி செயல்பாடுகளைச் செய்வதற்கான உங்கள் செயல் திறனை மேம்படுத்தவும் உதவும்.
We treat a variety of conditions including sports injuries, back pain, arthritis, and problems related to muscles, bones, and joints.
விளையாடும்போது ஏற்படும் காயங்கள், முதுகுவலி, மூட்டுவலி மற்றும் தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு உடல் வலிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்.
In most cases, you don't need a referral from a doctor to see a physiotherapist, but it's always good to check with your insurance company.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பிசியோதெரபிஸ்ட்டை அணுக உங்களுக்கு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, ஆனால் உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் சரிபார்ப்பது எப்போதும் சிறந்தது என்பதை பரிந்துரைக்கிறோம்.
During your first visit, the physiotherapist will ask you about your health, examine how you move, and create a treatment plan just for you.
உங்கள் முதல் நாள் சந்திப்பின் போது, பிசியோதெரபிஸ்ட் உங்கள் உடல்நலம் பற்றிக் கேட்பார், பின்னர் உங்கள் உடல் நிலையை ஆராய்ந்து உங்களுக்கான சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குவார்.
Each physiotherapy session lasts 30 to 60 minutes, depending on your needs and the treatment plan.
ஒவ்வொரு பிசியோதெரபி அமர்வும் உங்கள் தேவைகள் மற்றும் சிகிச்சைத் திட்டத்தைப் பொறுத்து 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
The number of sessions you need depends on your condition and how well you progress. Your therapist will discuss this matter with you after your initial examination.
உங்களுக்கு தேவையான பிசியோதெரபி அமர்வுகளின் எண்ணிக்கை உங்கள் உடல் நிலை மற்றும் நீங்கள் எவ்வளவு நன்றாக முன்னேறுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்கள் ஆரம்ப பரிசோதனைக்குப் பிறகு உங்கள் பிசியோதெரபிஸ்ட் இந்த விஷயம் குறித்து உங்களுடன் கலந்துஉரையாடுவார்.
Ensure to wear comfortable, loose-fitting clothes that allow for easy movement. Athletic wear like shorts or leggings and a T-shirt is ideal.
உடலை எளிதாக இயக்க உதவும் வசதியான, தளர்வான ஆடைகளை அணிவதை உறுதி செய்யவும். ஷார்ட்ஸ் அல்லது லெகிங்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற தடகள உடைகள் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
Yes, we do offer home physiotherapy visits if you cannot come to our clinic. Please contact us for more details.
ஆம், நீங்கள் எங்கள் கிளினிக்கிற்கு வர முடியாவிட்டால், நாங்கள் உங்கள் வீட்டிற்கே வந்து பிசியோதெரபி சிகிச்சை வழங்குவோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
We provide treatments like exercise therapy, manual therapy (hands-on techniques), electrotherapy, and advice on how to manage your condition.
உடற்பயிற்சி சிகிச்சை, கைமுறை சிகிச்சை (ஹேண்ட்-ஆன் நுட்பங்கள்), எலக்ட்ரோதெரபி மற்றும் உங்கள் நிலையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம்.
Copyright © 2024 Well Heals - All Rights Reserved.
Powered by GoDaddy
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.